வறுமையில் வாழும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு  ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் றெமீடியஸ் உதவி!

Saturday, August 18th, 2018

புனர்வாழ்வழிக்கப்பட்ட நிலையில் வறிய நிலையில் வாழும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான முடியப்பு றெமீடியஸ் தனது மாநகரசபை உறுப்பினர் பதவிக்கான இம்மாதத்திற்குரிய மாதாந்தக் கொடுப்பனவையும் லோரன்ஸ் பாஸ்கரன் என்ற முன்னாள் போராளிக்கு வழங்கிவைத்துள்ளார்.

யாழ் மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களும் தத்தமது பங்களிப்பை ஓரளவேனும் அவர்களுக்கு வழங்கவேண்டும் என்றும் யாழ் மாநகர சபையின் கன்னி அமர்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மற்றுமொரு மாநகரசபை உறுப்பினர் றீகன் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அது சபையில் எற்றுக்கொள்ளப்படாதிருக்கும் நிலையில் சுயதொழிலுக்கான முதலிடுகள் இன்றி தமது குடும்பத்தை கொண்டு செல்லமுடியாத நிலையில் வாழ்ந்துவந் லோரன்ஸ் பாஸ்கரன் என்ற  முன்னாள் போராளி ஒருவருக்கு கடற்றொழில் செய்வதற்கான பொருட்களை தனது இம்மாதக் கொடுப்பனவில் கொள்முதல் செய்து றெமீடியஸ் வழங்கிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

bandicam 2018-08-18 15-51-26-480

Related posts: