வன்முறைகளினால் வீடு மற்றும் உடமைகளை இழந்த அனைவருக்கும் நீதி வழங்குவதே முதல் பணி – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு!

Monday, May 16th, 2022

அண்மைய வன்முறைகளினால் வீடு மற்றும் உடமைகளை இழந்த அனைவருக்கும் நீதி வழங்குவதே தனது முதன்மையான பணி என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பதவியேற்றுக் கொண்டதன் பின்னர், கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்வதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனைத்து தகவல்களையும் பெற்று சந்தேகநபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான துரித வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: