வட மாகாண சுகாதாரத் துறையினருக்கு இன்றுமுதல் “பூஸ்டர் தடுப்பூசி” – மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!

Monday, November 1st, 2021

வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் சுகாதாரத் துறையினருக்கு இன்றுமுதல் மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மூன்றாவது கட்டமாக பைசர் தடுப்பூசியே வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் உள்ள போதனா மருத்துவனை, மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் ஆதார மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி வழங்கும் பணி முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், துணை மருத்துவ சேவையாளர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் போன்ற சுகாதாரத் துறையில் பணியாற்றுபவர்களுக்கே முதல் கட்டமாக மூன்றாது அலகு கொரானா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

அடுத்த கட்டமாக ஏனைய துறையினருக்கும் பொதுமக்களுக்கும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தெற்கின் பாடசாலைகளில் தமிழ் மொழி கற்பிப்பது மிக சாத்தியமானதாக்கப்பட்டது போன்று வடக்கு மாணவர்களுக்கும...
இந்தியாவில் இருந்து காங்சேன்துறை துறைமுகத்திற்கு அனுப்பப்படும் அத்தியவசிய பொருட்கள் – துரிதகதியில் ந...
வாகன இறக்குமதி விவகாரம் - காரணிகளை கவனமாக பரிசீலித்த பின்னரே தீர்மானிக்க வேண்டும் என நிதி இராஜாங்க அ...