வட மாகாணம் மத்திய அரசுடன் இணைந்து செயற்பட வேண்டும்: பிரதமர்

Monday, May 22nd, 2017

வடக்கு மாகாணத்தில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமாயின் வடக்கு மாகாண சபை மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கில் காணப்பட்ட போர் சூழல் காரணமாக வடக்கு மாகாணத்தின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட பிரதிநிதிகளை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையின் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

Related posts: