வட்டுக்கோட்டையில் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு!

Monday, December 14th, 2020

அராலி கிழக்கைச் சேர்ந்த பெண் ஒருவர் திடீரென் மயங்கிச் சரிந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்புக் காரணம் தொடர்பில் கண்டறிவதற்கு குருதி மாதிரிகள் பெறப்பட்டு கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி கிழக்கைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான 29 வயதுடைய மதுசன் பிரபாகினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முன்பதாக கடந்த 7ஆம் திகதி அவர், வீடு பெருக்கிக் கொண்டிருக்கும்போது மயங்கிச் சரிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டது.

இவ்வாறு சிகிச்சைப் பெற்று வந்தவர், 7 நாட்களின் பின்னர்நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: