வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரண்ணாகொட நியமனம்!

Thursday, December 9th, 2021

வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கடற்படை  முன்னாள் தளபதி, அட்மிரல் ஒஃப் த ஃப்ளீட் வசந்த கரண்ணாகொட நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று புதிய ஆளுநர் தமது நியமன கடிதத்தை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரித்துள்ளது.

வட மேல் மாகாண ஆளுநராக பதவி வகித்துவந்த ராஜா கொல்லுரே கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.

இதனையடுத்து, ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்காக ஓய்வுபெற்ற கடற்படை தளபதி வசந்த கரண்ணாகொட நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: