வடக்கில் அனைத்து வன்முறைகளும் விரைவில் கட்டுப்படுத்தப்படும் – வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்ம ரட்ண தெரிவிப்பு!

Wednesday, September 23rd, 2020

வடக்கில் இடம்பெறும் வன்முறைக் கும்பல்களின் செயற்பாடுகள் அனைத்தும் உடனடியாக கட்டுப்படுத்தப்படும் என தெரிவித்துள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்ம ரட்ண சமூக விரோதிகளை அடக்குவதற்கு முப்படைகளின் உதவிகள் தேவை ஏற்படின் அவர்களின் உதவியுடன் அந்த குழுக்களின் சமூக விரோத செயற்பாடுகள் அனைத்தும் அடக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இன்று காங்கேசன் துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் பதவியை ஏற்றுக்கொண்டார்.

பதவியை ஏற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் போதைப்பொருள் பாவனைகள், சட்ட ஒழுங்கு விதி முறை மீறல்கள்,வன்முறை குழுக்களின் அடாவடிகள் அனைத்துக்கும் எதிரான நடவடிக்கைகள் தொடரும்.

இனியும் அவ்வாறான குழுக்கள் இயங்கினால் அவர்களுக்கு எதிராக நீதியாக செயற்பட்டு அவற்றின் செயற்பாடுகள் உடனடியாக கட்டுப்படுத்தப்படும்.

வடக்கு மாகாணத்தில் இயங்குகின்ற வன்முறை குமுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை.எனவே போலீசார் கட்டுப்படுத்துவதற்கு அனைவரும்  ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

நீதியை கையிலெடுக்கும் இவ்வாறான வன்முறைக் குமுக்களுக்கு எதிராக பாரபட்சமின்றி நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவ்வாறான நடவடிக்கைகளுக்கு தேவைப்பட்டால் முப்படைகளின் உதவியுடன் நாம் அந்த குழுக்களை அடக்குவதற்கும் தயாராகவே இருக்கின்றோம்.எனவே எதிர்காலத்தில் அதற்கான துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

Related posts: