ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி மீண்டும் ஆரம்பம்!

Thursday, December 28th, 2017

ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி எதிர்வரும் சனிக்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு தேயிலை விற்பனையாளர்களின் ஒழுங்கமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கையின் தேயிலையில் வண்டுகள் இருப்பதாக தெரிவித்து, ரஷ்யா தற்காலிக தடையை ஏற்படுத்தியது. இதன்விளைவாக கடந்த இரண்டு வாரங்களாக ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி நிகழவில்லை. தற்போது இந்த தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி எதிர்வரும் 30ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

Related posts: