யுத்தத்தின் போது வடபகுதிக்கான உதவிப்பொருட்கள் தடுக்கப்பட்டதென்பது உண்மைக்கு புறம்பானது – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அறிவிப்பு!

Monday, February 21st, 2022

யுத்தத்தின் போது நாங்கள் திட்டமிட்டு வடபகுதிக்கான உதவிப்பொருட்களை தடுத்தோம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால் அது தவறானது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்

நாட்டின் பிரதான நாளிதழ் ஒன்றிற்கு அவர் வழங்கிய செவ்வியில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இவை அனைத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் இலங்கை குறித்த விசாரணை அறிக்கையிலிருந்தே ஆரம்பமாகின.

இந்த அறிக்கை எங்களிற்கு எதிராக 8 யுத்த குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியமை தொடாபில் நான்கு குற்றச்சாட்டுகள் ,சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறியமை தொடர்பில் நான்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

நான் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு தனியாக சென்று அந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தேன்.

உதாரணத்திற்கு யுத்தத்தின் போது நாங்கள் தி;ட்டமிட்டு வடபகுதிக்கான உதவிப்பொருட்களை தடுத்தோம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அது தவறானது. நான் அவ்வேளை கடற்படையிலிருந்தேன் வடபகுதிக்கு உதவிப்பொருட்களுடன் நூற்றுக்கணக்கான கப்பல்கள் சென்றன.

ஐநா உட்பட சர்வதேச சமூகம் இலங்கையை இதற்காக பாராட்டின முல்லைத்தீவு அரசாங்க அதிபராகயிருந்த இமெல்டா சுகுமார் ஒருமுறை மூன்று மாதங்களிற்கு அவசியமான உணவுப்பொருட்கள் இருப்பதாக தெரிவித்தார்.

இப்படியிருந்த போதிலும் மங்களசமரவீர யுத்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார். பரணகம ஆணைக்குழுவுடன் ஆறு சர்வதேச அளவில் பெயர் பெற்ற யுத்த குற்ற நிபுணர்கள் இணைந்து செயற்பட்டனர்,

அவர்கள் அனைவரும் நாங்கள் எந்த யுத்த குற்றங்களையும் இழைக்கவில்லை என உறுதியாக தெரிவித்தனர், அப்படியான சூழ்நிலையில் ஏன் சில நாடுகள் எங்கள் யுத்த வெற்றி வீரர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன.

இதேவேளை அமைச்சர் ஜிஎல்பீரிஸ் சிறப்பாக செயற்படுகின்றார், பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடுபவர்களை காப்பாற்ற சட்டங்களை தேவைப்பட்டால் திருத்துவேன் என தெரோசா மே தெரிவித்தார். அவர் அவ்வளவு தூரம் சென்றார் ஆனால் ஏன் எங்களிற்கு இதனை செய்கின்றனர்.

இவை அனைத்தும் போலியான பிழையான திட்டங்கள் நாங்கள் இவற்றை சவாலிற்கு உட்படுத்தவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: