யாழ். மாவட்டத்தில் முதற்கட்டமாக தடுப்பூசிகள் பெற்றுக்கொண்டவர்களுக்கு யூன் 28 ஆம் திகதிமுதல் இரண்டாவது செலுத்துகை நடைபெறும் – வடக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!

Friday, June 25th, 2021

யாழ் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டவர்களிற்கு அதன் தொடர்சியாக யூன் மாதம் 28 ஆம் திகதி திங்கட்கிழமைமுதல் யூலை மாதம் 03 ஆம் திகதி சனிக்கிழமைவரை இரண்டாவது தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கையில் –

குறித்த தடுப்பூசிகள் வழங்கப்படும் நிலையங்கள் தொடர்பாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மூலம் மக்களிற்கு அறிவிக்கப்படும் .பொதுமக்கள் இரண்டாவது தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதற்கு செல்லும்போது முதல் தடவை தடுப்பூசி பெற்றுக்கொண்டமையினை உறுதிப்படுத்துவதற்காக சுகாதார வைத்திய அதிகாhரி பணிமனையினால் வழங்கப்பட்ட அட்டையினை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேநேரம் சில வகை மருந்துகள், ஊசி மருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்களுக்கும், மற்றும் வேறு ஆபத்துக்குரிய நோய் நிலைமை உடையவர்களுக்கும் அவசரசிகிச்சைப் பிரிவுகள் உள்ள யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி, தெல்லிப்பளை, ஊர்காவற்துறை, பருத்தித்துறை போன்ற ஆதார வைத்தியசாலைகளில் முதல் தடவை வழங்கப்பட்டதனை போன்றே யூலை மாதம் 03 ஆம் திகதிசனிக்கிழமை இரண்டாவது தடுப்பூசிகளினை பெற்றுக்கொள்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு வழங்குவதற்காக பிரத்தியேகமாக தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

இதேவேளை

யாழ் மாவட்டத்தில் உள்ளநாட்பட்ட சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை செய்துகொண்ட நோயளர்களிற்கான கோவிட் 19 எதிரான தடுப்பூசியூன் மாதம் 26 ஆம் திகதி சனிக்கிழமை யாழ் போதனாவைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி, தெல்லிப்பளை, ஊர்காவற்துறை, பருத்தித்துறை போன்ற ஆதார வைத்தியசாலைகளில் வழங்கப்படும் என்றும் வடக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த நபர்கள் தாம் சிகிச்சைபெறும் சிகிச்சைநியைத்திற்கான பதிவு கொப்பி, நோய் நிர்ணய அட்டை மற்றும் உரிய ஆவணங்களுடன் தமக்கு அருகில் உள்ள மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகளில் ஏதாவது ஒன்றுக்கு சென்று இவ் தடுப்பூசிகளினைபெற்றுக் கொள்ளமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  18 வயதிற்கு மேற்பட்ட காசநோய் மற்றும்  மார்பு நோய்களுக்காக் சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பவர்கள் யாழ்ப்பாணம் காசநோய் சிகிச்சைநிலையத்திற்கு யூன் மாதம் 26 ஆம் திகதி சனிக்கிழமை காலை சென்று தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளுமாறு அவர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: