யாழ். மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித்தல் வரை அமுல்படுத்துவதற்கான காரணம் வெளியானது!

Thursday, March 26th, 2020

000

யாழ்ப்பாணம் தாவடிப் பிரதேசத்தினை சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் கொறோனா தொற்றுக்குள்ளாகி இருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டமையே யாழ். மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித்தல் வரை அமுல்படுத்தக் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் குறித்த நடவடிக்கை ஒரு முற்பாதுகாப்பு நடவடிக்கையாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால் இதுதொடர்பாக யாழ். மாவட்ட மக்கள் கலவரமடையத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். மாவட்டத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் பி.ப. 2 மணிவரை ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மறுஅறிவித்தல் வரை நீடிக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அரசாங்கம் மேற்கொள்ளும் தீர்மானங்களுக்கு உச்சபட்ச ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் விரைவாக கொறோனா அச்சுறுத்தலில் இருந்து பூரணமாக விடுபட முடியும் என்பதை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related posts: