யாழ். மாவட்டத்தில் அனுமதி பெற்ற வழித் தடத்தில் மாத்திரமே சிற்றூர்திகள், பேருந்துகள் சேவையாற்ற முடியும்

Monday, March 14th, 2016

யாழ். மாவட்டத்தில் தேசிய போக்குவரத்து ஆணைக் குழுவினால் வழங்கப்பட்டுள்ள வழியனுப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழியில் மாத்திரமே சிற்றூர்திகள் மற்றும் பேருந்துகள் சேவைகள் ஆற்ற முடியும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும், தேசிய போக்குவரத்து ஆணைக் குழுவின் யாழ். மாவட்ட ஆணையாளருமான நா. வேதநாயகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் யாழ். மாவட்டத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடும் சிற்றூர்திகள் மற்றும் பேருந்துகளின் உரிமையாளர்களின் சங்கங்களான யாழ்.பிராந்திய கூட்டிணைக்கப் பெற்ற பஸ் கம்பனிகளின் இணையம், வடமராட்சி சிற்றூர்திச் சங்கம், யாழ்ப்பாண வரையறுக்கப்பட்ட யாழ். தூர சேவைப் பேருந்து உரிமையாளர்களின் கம்பனி மற்றும் யாழ்ப்பாணம் காங்கேசன் துறை 769 பயணிகள் சிற்றூர்திச் சேவை உரிமையாளர்களின் வரையறுக்கப்பட்ட கம்பனி ஆகியவற்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் வழியனுமதிப் பத்திரத்தில் வழங்கப்பட்ட பாதை தவிர்ந்த வேறு எந்தப் பாதைகளிலும் சேவையாற்ற முடியாது. அவ்வாறு வேறு வழிகளில் சேவையாற்ற விரும்பினால் உரிய நடைமுறைகளுக்கமைய வழி மாற்றம் செய்து  சேவையில் ஈடுபடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களையும் மார்ச் 4 ஆம் திகதி வரை வழக்கமறியலில் வைக்க ஊர்...
நெருக்கடியில் இருந்து மீள அவுஸ்திரேலிய உதவும் - ஜனாதிபதி கோட்டாபயவிடம் அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்ச...
குற்றங்களுக்காக கடந்த வருடம் கைது செய்யப்பட்டவர்களில் பாரிய எண்ணிக்கையிலானவர்கள் கல்வி அறிவு கொண்டவர...