யாழ் மாவட்டச் செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் அனுஷ்டிப்பு!

Saturday, February 4th, 2017
 
இலங்கையின் 69 ஆவது தின சுதந்திர தினத்தினை முன்னிட்டு “வளமான நாடு வளம் மிக்க செல்வம்” எனும் தொனிப்பொருளில் இன்று சனிக்கிழமை(04) முற்பகல் யாழ். மாவட்டச் செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகத்தால் தேசியக்  கொடியேற்றி  வைக்கப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் சிறப்புரை நிகழ்த்தினார். முப்படை வீரர்களின் அணிவகுப்புக்களும், பாடசாலை மாணவர்களின் அணிவகுப்புக்களும், கலைநிகழ்வுகளும் இதன் போது இடம்பெற்றன..
இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா. செந்தில் நந்தனன், யாழ் மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண, மற்றும் கடற்படை,இராணுவ, விமானப் படைகளின் தலைமைக் கட்டளை அதிகாரிகள், சிவில் அமைப்பினர்கள், சர்வமதத்தினர்கள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
unnamed (1)
unnamed

Related posts: