யாழ். மாநகர சபையின் சிறப்பு அமர்வு இன்று!
Monday, May 28th, 2018யாழ்ப்பாண மாநகர சபையின் சிறப்பு அமர்வு இன்று காலை 9.00 மணிக்கு சபை முதல்வர் ஆனோல்ட் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்த அமர்வில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான நியமிக்கப்பட்ட நிலையியல் குழுக்கள் மற்றும் சபை பொறுப்பேற்கப்பட்ட காலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட செலவீனங்கள் வேலைத்திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்துவதுடன் சபையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் இந்த அமர்வு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே குறித்த சபையின் நிதிக்குழு ஆராய்வுக் கூட்டம் கடந்தவாம் நடைபெற்றபோது அதில் பல குறைபாடுகள் இருப்பதாக தெரிவித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா வெளிநடப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யானைக்கால் நோய் அற்ற நாடாக இலங்கை பிரகடனம்!
மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிக்கும் – வானிலை அவதான நிலையம்!
வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச ஊழியர்களுக்கு விசேட சலுகை - அமைச்சரவையும் அனுமதி வழங்கியது!
|
|