யாழ். பல்கலை துணைவேந்தர் பதவியிலிருந்து இடைநிறுத்தம்!

Tuesday, May 7th, 2019

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர். விக்னேஸ்வரன் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கடிதம் தொலைநகலில் ஊடாக பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் செயலாளரால் கையொப்பம் இடப்பட்ட குறித்த கடிதத்தில், பதவி இடைநிறுத்தல் தொடர்பான காரணங்கள் அல்லது வேறு தகவல்கள் எவையும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts: