யாழ்.குடாநாட்டிலுள்ள பொலிஸார் அனைவரதும் விடுப்புக்கள் திடீர் நிறுத்தம்!

Friday, November 17th, 2017

யாழ்ப்பாணத்தில் மீளவும் அதிகரித்துள்ள வாள்வெட்டுக் கும்பல்களின் அட்டூழியங்களை அடுத்து அனைத்துப் பொலிஸாரினதும் விடுப்புக்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கான அறிவுறுத்தலை வடக்குமாகாண மூத்தபிரதிப் பொலிஸ்மா அதிபர் யாழ்ப்பாணப் பிராந்தியத்திலுள்ள அனைத்துப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் நேற்றுக் காலை வழங்கினார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக வாள் வெட்டுச் சம்பவங்களும், அடாவடித்தனங்களும் மீண்டும் அதிகரித்துள்ளன.

இந்த நிலையிலேயே பொலிஸாரின் விடுமுறைகள் அனைத்தையும் நேற்றிலிருந்து மறு அறிவித்தல்வரை இடைநிறுத்துமாறு வடக்குமாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அறுவுறுத்தினார்.

Related posts: