யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை 

Saturday, June 3rd, 2017

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை(04) காலை-08.30 மணி முதல் மாலை- 05.30 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, யாழ். நாவலர் வீதியில் மாம்பழம் சந்தியிலிருந்து நல்லூர் குறுக்கு வீதி வரை, ஏ- வீதியில் பாரதி வீதியிலிருந்து செம்மணி வளைவு வரை, நெடுங்குளம் வீதியில் புகையிரதக் கடவை வரை, முள்ளி, நாவலடி, பூம்புகார், அரியாலை கிழக்கு,Cey- Nor பவுண்டேசன் லிமிற்ரெட், மாவட்டக் கடற்தொழில் கூட்டுறவுச் சங்கம், கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம், Sos சிறுவர் பூங்கா, அரியாலை டீசல் அன்ட் மோட்டார் என்ஜீனியரிங் பி.எல்.சி, நாயன்மார்க்கட்டு Carltion Sports Net Work(CSN) , சங்கன் கொங்கிறீட் மிக்ஸர் பிளான்ட், சட்டநாதர் வீதி, பருத்தித் துறை வீதியில் கல்வியங்காட்டுச் சநதையிலிருந்து நல்லூர் கோவில் வரை, நல்லூர் குறுக்கு வீதி, செம்மணி வீதி, கச்சேரி- நல்லூர் வீதி, கனகரட்ணம் வீதி, திருமகள் வீதி, மலர்மகள் வீதி, கலைமகள் வீதி, பூமகள் வீதி, சாஸ்திரியார் வீதி, நடுத்தெரு லேன், நாவலர் வீதி, நொத்தாரிஸ் லேன், வேலப்பர் வீதி, புவனேஸ்வரி அம்பாள் வீதி, புரூடி லேன், ஸ்ரான்லி கல்லூரி வீதி, சுப்பிரமணியம் வீதி, முதலியார் வீதி, பாரதி லேன், புங்கன் குளம் வீதியில் புகையிரதக் கடவை வரை, நாயன்மார் வீதி, குகன் வீதி, பொன்னம்பலம் வீதி ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: