யாழ். ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் படுகொலைச் சம்பவம்: சந்தேகத்தில் கைதான இருவரின் விளக்கமறியல் நீடிப்பு!

Tuesday, February 28th, 2017

யாழ். ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரினதும் விளக்கமறியல் எதிர்வரும்-13 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை (22) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கண்கண்ட சாட்சியமாகக் கருதப்பட்ட மாற்றுத்திறனாளிச் சிறுவன் சந்தேகநபர்களைச் சரியாக அடையாளம் காட்டியிருந்தான்.

அதனைத் தொடர்ந்து சந்தேகநபர்களை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

யாழ். ஊர்காவற்துறை பகுதியில் கடந்த ஜனவரி மாதம்- 24ஆம் திகதி ஏழு மாத கர்ப்பிணிப் பெண்ணான ஞானசேகரன் ஹம்சிகா (வயது- 27) என்ற பெண்மணி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த புதன்கிழமை (22) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கண்கண்ட சாட்சியமாக கருதப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுவன் சந்தேகநபர்களை சரியாக அடையாளம் காட்டியுள்ளான்.

தொடர்ந்து, அவர்களை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

யாழ். ஊர்காவற்துறை பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஏழு மாத கர்ப்பிணிப் பெண்ணான ஞானசேகரன் ஹம்சிகா (வயது- 27) என்ற கர்ப்பிணிப் பெண் படுகொலை செய்யப்பட்டிருந்தார். குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் சகோதரர்கள் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.

625.500.560.350.160.300.053.800.900.160.90

Related posts: