யாழ்மாவட்டத்தில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 220 பேர் தனிமைப்படுத்தலில் – அரசினால் வழங்கப்படும் நிவாரணம் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவதாகவும் யாழ் மாவட்ட செயலகம் தெரிவிப்பு!

Tuesday, December 1st, 2020

யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 10 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 220 பேர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளதாக யாழ் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

அத்துட்ன் யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை 22 பேர் கொரோனா தாக்கத்திற்கு உட்பட்டுள்ளார்கள். அதனைவிட 1010 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220 பேருக்கு அரசினால் வழங்கப்படுகின்ற நிவாரணம் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவதாகவும் மாவட்டச் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது மாவட்ட செயலகத்திற்கு 12.4 மில்லியன் ரூபா கிடைத்துள்ளது. அந்த நிதியின் மூலம் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் இதனைவிட நாளாந்தம் தனிமைப்படுத்தப்படும் குடும்பங்களின் விபரங்களை உரிய இடங்களுக்கு அனுப்பி நிதியினை பெற்று நிவாரணப்பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகவும் மாவட்ட டிசயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

முன்பதாக அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ் மாவட்டத்தில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியிருப்பவர்களது நிலைமைகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கான கொடுப்பனவுகளையும் உலருணவு பொருட்களையும் துரித கதியில் வழங்க வேண்டும் என்று கோரியிருந்த நிலையில் அதற்கான அனுமதியும் நிதியும் ஒதுக்கப்பட்டு மாவட்ட செயலகத்தினூடாக வழங்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். இநிநிலையிலேயே குறித்த நடவடிக்கைகள் யாழ் மாவட்ட செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே யாழ் மாவட்டத்தில் தற்பொழுது பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேபோல இதர செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் அனைத்து செயற்பாடுகளும் சுகாதார வழிகாட்டல்களுக்கமைய செயற்படுத்தப்பட வேண்டும். இருந்தபோதிலும், பொது மண்டபங்கள் மற்றும் ஏனைய ஒன்றுகூடல்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள மாவட்ட செயலகம் .உணவகங்களை பொறுத்தவரை 50 வீதமான ஆசனங்களைப் பயன்படுத்தி உணவகங்களை செயற்படுத்த முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. அண்மைய காலங்களில் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று குறிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து வெளிவந்தவர்களால் பரவி இருக்கின்றது. ஆகவே வெளியிடங்களிலிருந்து வருபவர்கள் தங்களுடைய உண்மையான விவரங்களை பதிவு செய்ய வேண்டும் எனவும் மாவட்ட செயலகம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: