யாழ்ப்பாண மாவட்டத்தில் கருவாடு உற்பத்தி அதிகரிப்பு!

Sunday, April 29th, 2018

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் கருவாடு உற்பத்தி படிப்படியாக அதிகரித்துள்ளது என்று யாழ்ப்பாண மாவட்ட நீரியல் வள திணைக்களத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆழியவளை, தாளையடி, பருத்தித்துறை கிழக்கு, மேற்கு, காங்கேசன்துறை கிழக்கு மேற்கு, சண்டிலிப்பாய், சுழிபுரம், நெடுந்தீவு, வேலணை, யாழ்ப்பாணம் கிழக்கு, மேற்கு, சாவகச்சேரி உள்ளிட்ட 14 பிரதேசங்களில் மீன்பிடி நடைபெற்று வருகின்றது.

21 ஆயிரத்து 268 மீன்பிடிக் குடும்பங்களைச் சேர்ந்த 22 ஆயிரத்து 122 மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனவரி தொடக்கம் மார்ச் வரையான இவர்களின் சராசரி மீன்பிடி 35 இலட்சம் கிலோகிராமாக காணப்படுகின்றது. இவ்வாறு பிடிக்கப்படும் மீன்கள் விற்பனை செய்யப்படுவதுடன் அவற்றை உலர்த்தி கருவாடும் உற்பத்தி செய்யும் முறையும் மேற்கொள்ளப்படுகின்றது.

இது சராசரியாக ஒரு மாதத்துக்கு ஒரு இலட்சத்து 90 ஆயிரமாக காணப்படுகின்றது. இந்த எண்ணிக்கை சராசரியாக கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. ஜனவரி மாதம் ஒரு இலட்சத்து 97 ஆயிரத்து 327 கிலோகிராம் கருவாடு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் சுமார் ஒரு இலட்சத்து 99 ஆயிரம் கிலோகிராம் உற்பத்தி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது கருவாடு உற்பத்தியின் அதிகரிப்பை சுட்டிக்காட்டுகின்றது.

Related posts: