யாழ்ப்பாணம் – மானிப்பாய் – கரைநகர் வீதியின் கட்டுமாணப் பணிகள் விரைவில் ஆரம்பம்!

Saturday, January 30th, 2021

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் – மானிப்பாய் – கரைநகர் வீதியின் கட்டுமான பணிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் மாவட்டத்தில் நீண்ட காலமாக இழுபறிநிலையில் காணப்பட்டு வந்த வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான யாழ் – மானிப்பாய் – காரைநகர் வீதியின் கட்டுமான பணிக்கான மதிப்பீட்டு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்நிலையிலேயே அதன் கட்டுமான பணிக்கான விலைமனு கோரல் நடவடிக்கைகள் ஒரு இலட்சம் கிலேமிற்றர் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த வீதியால் பயணததை மேற்கொள்ளும் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்திரந்த நிலையில் அது தொடர்பில் பலதரப்பினரிடமும் முறையிடப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோதிலும் அதன் பின்னரான ஆட்சியில் குறித்த அபிவிருத்தி திட்டம் முன்னெடடுக்கப்படாத நிலையில் காணப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபச்சவின் வழிநடத்தலிலான அரசு அமையப் பெற்றுள்ளதால் கடந்த காலத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் முன்மொழியப்பட்ட குறித்த அபிவிருத்தி திட்டம் தற்போது ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தில் உள்வாங்கப்பட்டு  விரைவில் இதற்கான கட்டுமான பணிகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே யாழ்ப்பாணம் – பொன்னாலை – பருத்தித்துறை வீதி மற்றும் யாழ்ப்பாணம் -நவாலி –  மூளாய் வீதி ஆகியவற்றின் கட்டுமானபணிகள் தற்போது இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: