யாழ்ப்பாணம் பிரதேசத்திற்குட்பட்ட பொது அமைப்புகளுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

யாழ் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட பொது அமைப்புகளுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் தளபாடங்கள் வழங்கிவைக்கப் பட்டுள்ளன.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாகத்தினரிடம் குறித்த பகுதி பொது அமைப்புகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கிட்டின் மூலம் குறித்த அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இன்றையதினம் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் மற்றும் யாழ் மாநகர பபை பிரதேச நிர்வாக செயலாளர்களான றீகன் மற்றும் ரஜீவ், ஆகியோர் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு குறித்த அமைப்புகளின் நிர்வாகத்தினரிடம் உபகரணங்களை வழங்கிவைத்தார்.
Related posts:
|
|