யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே விமான சேவை!

Saturday, February 1st, 2020

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் இரத்மலானை விமான நிலையத்திற்கும் இடையிலான உள்நாட்டு விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கையை பிட் எயார் விமான சேவை நிறுவனம் எடுத்துள்ளது.

கொழும்பு இரத்மலானையில் இருந்து தினமும் காலை 7.30 மணிக்கு புறப்படும் இவ்விமானம் காலை 8.20 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும்.

யாழ்ப்பாணத்தில் இருந்து முற்பகல் 9.30 புறப்படும் விமானம் முற்பகல் 10.20க்கு இரத்மலானையை வந்தடையும்.

விமானப் பயணத்திற்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் அறவிடப்படுகிறது. ஒரு பயணி கையில் 4 கிலோ கிராம் எடை கொண்ட பொருட்களையும் 20 கிலோ கிராம் எடை கொண்ட பயணப் பொதியையும் எடுத்துச் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: