யாழ்ப்பாணம் இன்று தேர்தல் ஒத்திகை !

Sunday, June 14th, 2020

யாழ்ப்பாணம், பதுளை, புத்தளம், களுத்துறை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளை மையப்படுத்தி இன்று தேர்தல் ஒத்திகை இடம்பெறவுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைய வாக்களிப்பை நடத்துவது குறித்து விளக்கமளிப்பதற்காக இந்த தேர்தல் ஒத்திகை இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினம் நுவரெலியா, மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை, கம்பஹா, மாத்தறை, பொலனறுவை, உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் ஒத்திகை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

Related posts: