யாழ்ப்பாணத்தில் 3 ஆயிரதது 600 ஐ தாண்டியது கொரோனா தொற்று – 2ஆம் கட்ட தடுப்பூசி சிலதினங்களில் கிடைக்கும் என மாவட்ட கொரோனா செயலணி அறிவிப்பு!

Sunday, June 6th, 2021

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 600 ஆக உயர்வடைந்துள்ளதுதாக சுட்டிக்காட்டியுள்ள மாவட்ட கொரோனா செயலணி  நேற்று மட்டும்  92 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

அதேநேரம் கொரோனா தொற்றின் காரணமாக யாழ் மாவட்டத்தில் இதுவரை 48 இழப்புக்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ள குறித்த செயலணி நல்லூர்  மற்றும் உடுவில் பகுதிகளில் 3 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அத்துடன் 5000 ரூபா கொடுப்பனவுக்காக  கிடைத்த நிதியில் 59 ஆயிரம்  குடும்பங்களுக்கு இதுவரை கொடுப்பனவுகள்  வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில்  பொதுமக்கள் சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர் என்றும் குறித்த செயலணி சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் தடுப்பூசி வழங்கும் முதற்கட்ட நடவடிக்கை நிறைவடைந்துள்ளது. இதன்போது 49 ஆயிரத்து 577 பேருக்கு ஊசிகள் வழங்கப்பட்டுள்ளன.  அத்துடன் 2ஆம் கட்ட  தடுப்பூசி எதிர்வரும் 10 ஆம் திகதியளவில் தமக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் குறித்த செயலணி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

சுன்னாகம் மயிலங்காடு பகுதியில் 10 பேருக்கு கொவிட்-19 தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவர்கள் சிகிச்சை நிலையத்துக்கு செல்ல முடியாது என மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

தொற்றாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டதையடுத்து சுகாதாரத் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். எனினும் தொற்றாளர்கள் கொவிட் சிகிச்சை நிலையத்துக்கு செல்ல மறுத்துள்ளனர்

அத்துடன் தொற்றுக்குள்ளானவர்கள் தமக்கு கொவிட் தொற்று இல்லை எனவும் பரிசோதனைகளில் நம்பிக்கையில்லை எனவும் தெரிவித்து தொடர்ந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுவரும் அதேவேளை  தங்களை வற்புறுத்தினால் உயிரை மாய்ப்போம் என்றும்  எச்சரித்தனர்.

இதனையடுத்து தொற்றாளர்களை சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: