யாழ்ப்பாணத்தில் பிரபல தனியார் மருத்துவமனையிலிருந்து காலாவதியான மருந்துகள் கண்டுபிடிப்பு!

Saturday, February 18th, 2017

யாழ் நகரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் (கிளினிக்) காலாவதியான மருந்துகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிரு ந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

யாழ் நகரில் வைத்தியசாலை வீதியில்  உள்ள பிரபல்யமான தனியார் மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் காலாவதியான நிலையில் உள்ள மருந்துகளே நோயாளிகளுக்கு விற்பனை செய்வதாக யாழ்மாவட்ட பாவனையாளர் அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து இடம்பெற்ற சோதனை நடவடிக்கையில் நூற்றுக்கு மேற்பட்ட மருந்துவில்லைகள் கண்டு பிடிக்கப்ப ட்டுள்ளன.

இதில் நீரிழிவுக்குப் பாவிக்கும் மருந்துவில்லைகளே அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டவையாகும். இதனையடுத்து குறித்த மருத்துவ மனையில் இருந்து மருந்து வில்லைகள் அப்புறப்படுத்தப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
09-1481273739-2whatmedicinesworkforprematureejaculators

Related posts: