யாழில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி. கே .அப்துல்கலாமின் 85 ஆவது பிறந்த தினம்!

மறைந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான கலாநிதி-ஏ.பி. கே அப்துல்கலாமின் 85 ஆவது பிறந்த தின நிகழ்வு இன்று (15) முற்பகல்-09.30 மணியளவில் யாழ்.பொதுநூலகத்திலுள்ள இந்தியக் கோர்ணர் பகுதியில் இடம்பெற்றது.
இதன் போது அங்கு வைக்கப்பட்டிருந்த அப்துல்கலாமின் உருவச் சிலைக்கு யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆ.நடராஜன் மற்றும் அவரது பாரியார் ஆகியோரால் மலர் மாலை சூட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து யாழ். இந்துக் கல்லூரி, யாழ். மத்திய கல்லூரி, யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவ, மாணவிகளின் அப்துல் கலாம் தொடர்பான விசேட பேச்சுக்கள், கவிகள், இந்திய விடுதலைப் பாக்களின் இசை என்பன இடம்பெற்றன. யாழ். இந்தியத் துணைத் தூதுவர், யாழ். இந்துக் கல்லூரி அதிபர் ஆகியோரும் உரையாற்றினர். நிகழ்வுகளை வழங்கிய அனைத்து மாணவர்களும் கெளரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன், வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம், வடமாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ். மத்திய கல்லூரி, யாழ். இந்துக் கல்லூரி, யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அதிபர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Related posts:
|
|