யாழில் ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது!

Tuesday, July 23rd, 2019

மானிப்பாய் பிரதேசத்தில் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்ட ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு மானிப்பாய் இணுவில் வீதியில் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆவா வாள்வெட்டுக் கும்பலை பொலிஸார் வழிமறித்த போது அங்கு மோதல் ஏற்பட்டு பொலிஸார் மீது தாக்கதல் நடத்த முற்பட்டுள்ளனர்.

இதன்போது ஏனைய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றிருந்த நிலையில் மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: