மோசடிகளை தடுக்க தபாலகத்தில் ஸ்கான் இயந்திரம்!

தபால் மூலமாக நடைபெற்றுவரும் மோசடிகளைத் தடுப்பதற்கு ஸ்கான் இயந்திரம் தேவையென தபால்மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் அண்மைய காலத்தில் தபால் மூலம் போதைப் பொருள் வியாபாரம் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளதாகவும் இதனைத் தடுப்பதற்காகவே இந்த ஸ்கேன் இயந்திரத்தின் உதவி தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணை நடவடிக்கைகளுககு அமைய இதற்கான விசாரணைகளை தபால் திணைக்களத்தினுள் ஆரம்பித்துள்ளதாகவும் இது போன்ற குற்றங்களையும் மோசடிகளையும் கண்டறிய ஸ்கான் இயந்திரம் தேவை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
3 இலட்சத்து 80 ஆயிரம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்க நடவடிக்கை!
ரயில்வே முகாமைத்துவ பணிகளுக்காக ஜிபிஎஸ் தொழில்நுட்பம் !
நீதியரசர் விக்னேஸ்வரனின் இயலாமையாலே கிடைத்த சந்தர்ப்பம் தவறவிடப்பட்டது – சுவிஸ் தூதுவருடனான சந்திப்ப...
|
|