மொடேனா தடுப்பூசிகள் இலங்கையர்கள் மீண்டும் தொழில்களிற்கு திரும்புவதற்கும் ஆரோக்கியமானதாக அமையும் – அமெரிக்க தூதுவர் நம்பிக்கை!

Friday, July 16th, 2021

அமெரிக்கா வழங்கியுள்ள மொடேனாகொரோனா வைரஸ் தடுப்பூசிகள் இலங்கையர்கள் மீண்டும் தொழில்களிற்கு திரும்புவதற்கும் ஆரோக்கியமாக விளங்குவதற்கும் உதவிபுரியும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொவக்ஸ் திட்டத்தின் கீழ் அமெரிக்கா வழங்கியுள்ள 1.5 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் இலங்கை வந்து சேர்ந்துள்ளமை நிலையில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இதனை தெரிவித்துள்ளது

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

அமெரிக்கா இலங்கைக்கு 1.5 மில்லியன் டோஸ் மொடேனா கொரோனாவைரஸ் தடுப்பூசியை வழங்கியுள்ளது

கொவக்ஸ் திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட இந்த தடுப்பூசிகள் உயிர்களை காப்பாற்றுவதற்கும் இகொரோனா பெருந்தொற்றை முடிவிற்கு கொண்டுவருவதற்கான தடுப்பூசிவழங்கும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு உதவும்.

சர்வதேச பெருந்தொற்றை முடிவிற்கு கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பு காரணமாகவும் இலங்கை மக்களுடன் நீடித்த உறவுகள் காரணமாகவும் இந்த தடுப்பூசிகளை இலவசமாக இலங்கைக்கு வழங்கியுள்ளோம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்தார்.

இந்ததடுப்பூசிகள் இலங்கையர்கள் மீண்டும் தொழில்களிற்கு திரும்புவதற்கும் ஆரோக்கியமாக விளங்குவதற்கும் உதவிபுரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால உறவின் வெளிப்பாடாக நாங்கள்இதனை கருதுகின்றோம் என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசிகளை வழங்குவதற்கு இலங்கையின் சுகாதார அமைச்சு யுனிசெவ் ஏனைய கொவக்ஸ் சகாக்கள் ஆகியவர்களின் ஒத்துழைப்புடனான எங்கள் நடவடிக்கை பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கும்இமாற்றமடைந்த புதிய வைரஸ்களின் உருவாக்கத்தை தாமதப்படுத்துவதற்கும் சர்வதேச பொருளாதாரத்தை மீள ஆரம்பிப்பதற்கும் முக்கியமானது என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: