மே 9 சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 1,500 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

Sunday, May 22nd, 2022

கடந்த ஒன்பதாம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியாக 1,500 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.  

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

கைதானவர்களில் 677 பேர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில், இதுவரையில் 844 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: