மூன்று மாவட்டங்களில் கடுமையான வெப்பம் – எச்சரிக்கிறது வானிலை அவதான நிலையம்!

Monday, March 11th, 2019

நாட்டில் இன்றும்(11) கடுமையான வெப்பநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலைஅதிகரித்திருக்கும் எனவும் முடியுமான அளவில் வெயிலில் தொடர்ந்து நிற்பதை தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு குறித்த நிலையம் எச்சரித்துள்ளது.

மேலும், முதியோரும், சிறுவர்களும் கடுமையான வெப்ப தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் கோரியுள்ளது.

Related posts: