மூன்று மாத காலத்தில்  11,000 இற்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு!

Saturday, March 12th, 2016
இவ் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 11,313 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 51.56 வீதமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.
நுளம்புப் பெருக்கத்திற்கு ஏதுவாகவுள்ள இடங்கள், சூழல்களை தொடர்ந்தும் துப்புரவாக பேணவேண்டியதன் அவசியத்தையே இந்த நிலைமை உணர்த்துவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மூன்று நாட்களுக்கும் மேல் காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில், வைத்தியரை நாடி சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts: