முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்னவின் பூதவுடல் நாடாளுமன்றத்தில்!

Friday, November 22nd, 2019

காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்னவின் பூதவுடலுக்கு கௌரவம் அளிக்கும் வகையில், பூதவுடல் இன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு கொண்டு வரப்படவுள்ளது.

இன்று பிற்பகல் ஒரு மணியிலிருந்து 3 மணிவரை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் பூதவுடல் வைக்கப்படவுள்ளது.

பூதவுடலுக்கு கௌரவம் செலுத்துவதற்காக வருகை தரவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், உறவினர், நண்பர்கள் பகல் 12.30க்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு வருகை தர வேண்டும் என பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்ககேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts:

ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் திருஞானலிங்கத்தின் முயற்சியால் அரியாலையில் உப வீதிகள் ச...
68 வீதமான பாடசாலை சீருடைத் துணிகள் வலய அலுவலகங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன - இராஜாங்க அமைச்சரா...
காங்கேசன்துறைக்கு இன்றுமுதல் முதலாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி தொடருந்து சேவை முன்னெடு...