முதல் முறையாக ஹம்பாந்தோட்டையில் நண்டு வளர்ப்பு!
Saturday, April 8th, 2017
நாட்டில் முதல் முறையாக நண்டு வளர்ப்பு நிலையம் ஒன்றை ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நிர்மாணிக்க போவதாக மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதனை தவிர மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கரிலும் மன்னாரிலும் நீர்வாழ் உயிரினங்களை வளர்க்கும் திட்டங்கள் இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
55 அடியை விட பெரிய மீன்பிடி படகுகளை தயாரிக்கும் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட முதலாவது படகை கடலுக்குள் விடும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், 2020 ஆம் ஆண்டில் மீன்பிடித்துறையில் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே 10 ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீன்பிடித்துறை முன்னேற்ற எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை.மீன்பிடித்துறைக்கும் குறைவான நிதியே ஒதுக்கப்பட்டது. எனினும் தற்போதைய அரசாங்கம் மீன்பிடித்துறையின் முன்னேற்றத்திற்கு தேவையான நிதியை வழங்கி வருகிறது எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|