முடிவுக்கு வந்தது விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு எதிரான விசாரணை!

சர்ச்சைக்குரிய விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை கைவிடப்போவதாக சுவீடன் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பின் மூலம் 7 ஆண்டுகால சட்ட இழுபறி நிலை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.45 வயதாகும் அசாஞ்சே 2012ம் ஆண்டு முதல் அரசியல் புகலிடம் வழங்கப்பட்டு லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் இருந்து வருகிறார்.
பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டில் தன்னை சுவீடனுக்கு நாடுகடத்தும் முயற்சியைத் தடுக்க அவர் ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்தார்.மூன்று பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு வந்த அசாஞ்சே அனைத்தையும் மறுத்து வந்தார்.அமெரிக்க வெளியுறவுக் கொள்கை உள்ளிட்ட பல முக்கிய ரகசிய ஆவணங்களை அசாஞ்சே வெளியிட்டதையடுத்து அவர் மீது பலவிதமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.இந்நிலையில் தற்போது சுவீடன் இந்த விசாரணையைக் கைவிடப்போவதாக அறிவித்துள்ளது.
Related posts:
|
|