முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வயதெல்லை நிர்ணயம்!

Wednesday, November 2nd, 2016

 

25 வயதை விட குறைந்தவர்கள் முச்சக்கர வண்டி செலுத்த அனுமதிக்கக் கூடாது என முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழிலாளர்களின் சங்கத்தலைவர் கே.டி.அல்விஸ், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 25 வயதுக்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டி சாரதிகள் பொது மக்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு மூன்றாண்டுகள் பரீட்சார்த்தக் காலம் வழங்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.

தற்போது இலங்கை தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு முச்சக்கர வண்டிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டளவில் முச்சக்கர வண்டி காலணியாக இலங்கை மாற்றமடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணசபையினால் முச்சக்கர வண்டிகள் பதிவுக்கு உட்படுத்தப்படுவது சரியான விடயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் வெளிப்பிரதேச முச்சக்கர வண்டிகள் மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதனை கட்டுப்படுத்த முடியும் என கே.டி.அல்விஸ் தெரிவித்துள்ளார்.

5936364-Three_wheelers-0

Related posts: