மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர உத்தரவு!

Wednesday, March 8th, 2017

இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு செயலாளருக்கு எழுத்து மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இரவு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு இந்திய மீனவர் கொல்ல்பட்டதுடன் இரண்டு மீனவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, இந்திய உயர்ஸ்தானிகருடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரே தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கைக் கடற்படையினர் நிராகரித்துள்ளனர்.

Related posts:


நெல் அறுவடையின் போது பொலிஸாரின் இடையூறு இருக்கமாட்டாது - கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்!
மதத்தலைவர்கள் சிலர் போதிக்கும் பிழையான விடயங்களை நம்பவேண்டாம் - கிடைக்கின்ற தடுப்பூசிகளை பெற்றுக்கொ...
நாட்டையும் வருங்கால சந்ததியினரையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் - பிரதமர் மஹிந்த ர...