மீண்டும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் சேவையில்!

ஆரம்பிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் குற்றவியல் நீதி தொடர்பான பல்கலைக்கழகம், முன்னாள் பொலிஸ் மா அதிபர் என். கே. இலங்ககோன் தலைமையில் ஆரம்பிக்கப்படும் என சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தெஹிவளை, அத்திட்டிய பிரதேசத்தில் இந்த பல்கலைக்கழகத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், குறித்த பல்கலைக்கழகத்தை அமைக்க சட்டப்பூர்வ ஒப்புதலைப் பெற, அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த பல்கலைக்கழகத்தை, சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டதாக முன்னெடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
சத்திரசிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு சுகாதார அமைச்சு நிபந்தனை!
மீன்பிடிப் படகுகளில் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தத் தடை!
சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் - பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண வலியுறுத்து!
|
|