மீண்டும் போராட்டத்தினை முன்னெடுக்க வடமாகாண பட்டதாரிகள் தீர்மானம்!

Monday, February 19th, 2018

அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி நிலைகளுக்குள் உள்வாங்குவதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத்தவறியமையினால், மீண்டும் தமது போராட்டத்தினை முன்னெடுக்க வடமாகாண பட்டதாரிகள் தீர்மானித்துள்ளனர்.

தமது வேலைவாய்ப்பு தொடர்பாக வடமாகாண பட்டதாரிகள் இன்று (19) வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஒன்று கூடி கலந்துரையாடினார்கள்.

அந்த கலந்துரையாடலின் போது, கடந்த வருடம் முன்னெடுத்த தொடர் போராட்டத்தினைப் போன்று மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக பட்டதாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வருடம் 143 நாட்களாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வந்த நிலையில், வடமாகாண ஆளுநர் ஊடாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்குவதாக அரசாங்கம் வாக்குறுதி தந்திருந்தது. ஆனால், அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில், இதுவரையில் எமக்கான சரியான தீர்;வுகள் எட்டப்படாத நிலையில், மீண்டும் ஒரு போராட்டத்தினை முன்னெடுக்கும் சூழ்நிலைக்குத் தள்ப்பட்டுள்ளோம்.

இன்னும் ஓரிரு வாரங்களில் எமக்கான தீர்;வினை அரசாங்கம் தர வேண்டும். எமது போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம். ஏனெனில் பட்டதாரிகளுக்கான சரியான நியமனங்கள் தராத காரணத்தினால், சமூக பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, நல்லாட்சி அரசாங்கம் எமக்கான தீர்;வினை விரைந்து வழங்க வேண்டும். அவ்வாறு வழங்க தவறும் பட்சத்தில் மீண்டும் எமது போராட்டத்தினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

தமது கோரிக்கையினை முன்வைத்த மகஜர் ஒன்றிணையும், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் வடமாகாண பட்டதாரிகள் மேலும் தெரிவித்னர்.

Related posts: