மீண்டும் ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி பொதுசெயலாளர் இலங்கை விஜயம்!

ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி பொதுசெயலாளர் ஜெஃப்ரி ஃபெல்ட்மன் மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஐ.நா சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அவர், இந்த மாதம் 9ம் திகதி இலங்கைக்கு வருகை தந்து எதிர்வரும் 11ம் திகதி வரை இலங்கையில் தங்கி இருப்பார்.
இதன்போது அவர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும், அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் என்பவற்றின் பிரதிநிதிகளையும், மதத்தலைவர்களையும் சந்தித்துபேச்சுவார்த்தை நடத்துவார்.
வடக்கு, மத்திய மாகாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் விஜயம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கண்ணீர் கடலில் தத்தளிக்கிறது தமிழகம்!
500 மில்லியன் பெறுமதியான வைர கல்லுடன் ஒருவர் கைது!
நிதி ஈட்டல்களை வீணடிக்கும் செயற்பாடுகளை நிறுத்தி மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கான வழிவகைகளை உரு...
|
|