மிரிஹானை சம்பவம் – 15 பேருக்கு இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்நிலை!

Monday, May 2nd, 2022

அண்மையில் மிரிஹானை பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட 15 பேர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளனர்.

வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காகவே அவர்கள் குறித்த திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட அமைதியின்மையால் 26 பேர் காயமடைந்தனர். சம்பவம் தொடர்பில் 54 பேர் கைதாகினர்.

இதனையடுத்து நுகேகொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 15 பேர் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக இன்றையதினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டதாக சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: