மின் வெட்டை அமுல்படுத்த தயாரில்லை- அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

Sunday, July 30th, 2017

குறுகிய நேரத்திற்காவது மின் வெட்டை அமுல்படுத்த தயாரில்லை என்று மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

டீசல் பிரச்சினையால் நெருக்கடியான நேரங்களில் (Peak Time) 2 மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்துமாறு கடந்த தினங்களில் தன்னிடம் தொழில்நுட்ப பிரிவினால் யோசனை முன் வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற எரிசக்தி முகாமையாளர்கள் சங்கத்தின் வருடாந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனைக் கூறினார்.

Related posts: