மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இன்று வெளியாகும் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Wednesday, February 28th, 2024

மின்சாரக் கட்டணத்  திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி புதிய மின் கட்டண திருத்தத்தின்படி, மின் கட்டணம் 18 சதவீதத்தால் குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் நோக்கில் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்றைய தினம் கூட உள்ளது.

முன்பதாக கடந்த 22 ஆம் திகதி கட்டணத் திருத்தம் தொடர்பிலான யோசனை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட அதே அளவில் மின்சாரக் கட்டணங்களை குறைப்பதற்கு உத்தேசித்துள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அண்மையில் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதுடன், மக்களிடமிருந்து தூர விலகி நிற்காமல் செயற்படுங்கள்” - இராஜாங்...
எக்ஸ் பிரஸ் - பேர்ள் தீ விபத்தின் கடல் மாசுபாட்டைக் குறைத்து மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்ரக ...
பிராந்தியப் பாதுகாப்பு விடயத்தில் அயல் நாடுகளின் ஸ்திரத்தன்மையை, இந்தியா அதிகளவில் எதிர்பார்க்கிறது ...