மிகவும் கடுமையான நேரங்களில் மட்டுமே பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் – சபையில் அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, March 22nd, 2022

நாட்டில் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் இக்கட்டான நிலைகளிலேயே பயன்படுத்தப்படும் என அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் சபையில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் இப்போது சற்று இலகுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த 40 வருடங்களாக காணப்படும் இந்த நடைமுறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, இதுவரை 81 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் சட்டத்தில் உள்ள சில உறுப்புரை வரிசையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, விசாரணை காலம் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேல் நீதி மன்றில் விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர இக்கட்டான, கடுமையான நிலைமைகளில் மட்டும் இந்த சட்டத்தை பயன்படுத்துமாறு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவுறுத்தியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்

000

Related posts: