மாலபே மாணவர்களுக்கு பயிற்சி நிச்சயம்! – அமைச்சர் திஸாநாயக்க!

சர்ச்சைக்கரிய மாலபே தனியார் வைத்தியக் கல்லூரி மாணவர்களுக்கு நிச்சயமாக வைத்தியப் பயிற்சியை வழங்க வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை – சேத்சிரிபாய பகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறுதெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள ஏனைய வைத்திய கல்லூரிகளுடன் ஒப்பிடுகையில் மாலபே வைத்திய கல்லூரியில் சிறந்த வசதிகள் காணப்படுவதாகவும், எனவே இந்த மாணவர்களுக்கு வைத்தியப் பயிற்சிகளை கட்டாயம் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வைத்திய சபைக்கு, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கட்டுப்பட்டவர் அல்ல எனவும், அதற்கு அவருக்கு அதிகாரம் உள்ளதாகவும், இதன்போது எஸ்.பி.திஸாநாயக்க கூறினார்.
Related posts:
கொக்குவில் பகுதி விசேட பொலிஸரினால் சுற்றிவளைப்பு: குழப்பத்தில் மக்கள்!
யாழ். பல்கலைக்கழகத்தில் போராட்டம்!
எரிபொருள் இருப்புகளைப் பொறுத்து திட்டமிடப்பட்ட மின்தடை குறைக்கப்படலாம் - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு...
|
|