மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, July 17th, 2021

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

மகா சங்கத்தினருடன் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பல்கலை மானியங்கள் ஆணைக்குழுவின் சட்டத்தில் உள்ள தடைகளை நீக்கி குறித்த பல்கலைக்கழகத்தை அதன் எல்லைக்குள் கொண்டுவருவதற்கான புதிய சட்டம் குறித்து ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

இலவசக் கல்வியை இராணுவமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியிருந்ததுடன் நாடளாவிய ரீதியில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: