மானிப்பாய் பிரதேச சபை செயலாளருக்கு எதிராக உதவி உள்ளூராட்சி ஆணையாளரிடம் சபை உறுப்பினர்களால் முறைப்பாடு!

Monday, August 31st, 2020

மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர்கள் மானிப்பாய் பிரதேச சபை செயலாளருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி இன்றைய தினம் உதவி உள்ளூராட்சி ஆணையாளரிடம் கோரிக்கையை முன் வைத்துள்ளார்கள்

மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் ஜெபநேசன் தலைமையில் மானிப்பாய் பிரதேச சபையில் அங்கம்வகிக்கும் அனைத்துக் கட்சியினையும் சேர்ந்த உறுப்பினர்கள் இன்றையதினம் யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள உள்ளூராட்சி உதவிஆணையாளர் அலுவலகத்தில் உதவி உள்ளூராட்சி ஆணையாளரை சந்தித்து முறையிட்டனர்

அண்மைய நாட்களில் மானிப்பாய் பிரதேச சபையில் சில முறைகேடான சம்பவங்கள் ,திருட்டு சம்பவங்கள்இடம்பெற்றுள்ளதாகவும் அதற்கு நிர்வாகத்திற்கு பொறுப்பான செயலாளரால் உரிய பதில் வழங்காமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மேலும் செயலாளரின்  செயற்பாட்டினால்  சபையினால்  முன்னெடுக்கப்படும்  இவ்வருடத்திற்கான அபிவிருத்தி  திட்டங்கள் கிடப்பில் கிடப்பதாகவும் இது தொடர்பில் ஏற்கனவே எழுத்து மூலமாக பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டும் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும்   இன்றைய தினம் உள்ளூராட்சி உதவி ஆணையாளரை சந்தித்து முறையிட்டுள்ளார்கள்

Related posts: