மஹாபொல புலமைப்பரிசில் எதிர்வரும் திங்கட்கிழமை !

Friday, January 10th, 2020

பல்கலைகழக மாணவர்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்குரிய மஹாபொல புலமைப்பரிசில் மற்றும் மாணவர் உதவித்தொகையினை எதிர்வரும் திங்கட்கிழமை செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் மற்றும் உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விரிவுரைகளுக்கான 80 சதவீத வரவினை பூர்த்தி செய்யாத மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசினை வழங்குதல், மாணவர் உதவித்தொகை மற்றும் மஹாபொல புலமைப்பரிசில் ஆகியவற்றை சமமான மட்டத்திற்கு கொண்டு வருதல் உள்ளிடட விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர சப்ரகமுவ பல்கலைக்கழகத்துடன் தொடர்பான பிரச்சினைகள், மாணவர் உதவித்தொகையை வழங்கும்போது கருத்திற் கொள்ளப்படும்.

பெற்றோரின் வருமானத்தை 7 இலட்சம் வரை அதிகரித்தல், தொழில்புரியும் மக்களின் சம்பளத்தினை அதிகரித்தல் ஆகிய முன்மொழிவுகளுக்கு விரைவில் தீர்வுகளை பெற்றுக் கொடுத்தல் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

குறித்த பிரச்சினைகள் தொடர்பில் மாதத்திற்கு ஒரு தடவையோ அல்லது மாணவர்களின் விருப்பப்படி இரண்டு வாரங்களுக்கொரு தடவையோ கலந்துரையாடுவதற்கு முன்மொழியப்பட்டது.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் மாணவர் சங்கங்களுடன் கலந்துரையாடி தீர்மானிப்பதாக கலந்துரையாடலில் பங்கேற்ற மாணவ பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

Related posts: