மழையுடன் கூடிய காலநிலை : டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரிப்பு!

Monday, November 26th, 2018

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

உயிரியல் குறியீட்டில் 20 வீத நுளம்புப் பெருக்க அதிகரிப்பு தற்போது காணப்படுவதாகவும், அதற்கமைய, டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு மத்திய மற்றும் மேல் மாகாணம் உள்ளிட்ட பகுதியில் டெங்கு நோயாளர்களின் வீதம் அதிகரித்துள்ளதாகவும் நஜித் சுமனசேன தெரிவித்துள்ளார். இதன்காரணமாக, தமது வீட்டுச் சுற்றுச்சூழலையும் தொழில் புரியும் இடங்களையும் சுத்தமாக வைத்திருக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts: